நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 173 நாள் சிறை

அம்பத்தூர்: அம்பத்தூர் அத்திப்பட்டு, ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் தயாளன் (30). ஆட்டோ டிரைவர். இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதனால் ஐசிஎப் காவல் நிலைய ரவுடி பட்டியலில்  உள்ளார். கடந்த மார்ச் 28ம் தேதி குற்றச்செயல் ஈடுபட மாட்டேன், என அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி தயாளன் அதே பகுதி இளம்பெண்ணை கிண்டல் செய்து, அடித்து உதைத்துள்ளார். புகாரின்பேரில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தயாளனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து உறுதிமொழியை மீறியதற்காக தயானுக்கு அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் 173 நாள் சிறை தண்டனை விதித்தார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>