ஏனாமில் பரபரப்பு கிரண்பேடி ஆய்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் 2 நாட்கள் கவர்னர் கிரண்பேடி   ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு தொகுதி எம்எல்ஏவும்,   சுற்றுலாத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் கடும் எதிர்ப்பு   தெரிவித்தார். ஏனாமில் 50 ஆண்டுக்கு மேலாக உள்ள ஒரு தீவு ஆந்திராவுக்கா   அல்லது புதுச்சேரிக்கா என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. ஆந்திராவைச்   சேர்ந்த கந்தராவ் என்பவருக்கு ஆதரவாக இவ்வழக்கில் செயல்படுமாறு கிரண்பேடி   தன்னை வலியுறுத்தியதாக அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில்   நேற்றிரவு கவர்னர் கிரண்பேடி ஏனாம் சென்றார். ஆய்வுக்கு செல்லும் அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு சட்டை அணிந்தும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் “கோ   பேக் கிரண்பேடி” என பேனர்களை ஆங்காங்கே வைத்திருந்தனர். கவர்னர் ஆய்வுக்கு செல்லும் சாலைகளில் பொதுமக்கள் மனித   சங்கிலியாக நின்று வாயில் கருப்புத் துணியை கட்டியபடி எதிர்ப்பு தெரிவித்தனர்.  பலத்த எதிர்ப்பால் 2 மணி நேரம் தாமதமாக ஆய்வுக்கு கிளம்பிய கவர்னர் கிரண்பேடிக்கு குருசம் பேட் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories: