பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது

* மும்பையில் இருந்து ரயில் மூலம் கடத்தல்

சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து பெரியமேடு போலீசார் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெரியமேடு திருவேங்கடம் தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சிலர் தங்கி மாலை நேரங்களில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. போலீசார் அதிரடியாக லாட்ஜில் சோதனை செய்தனர். அதில், திருவொற்றியூர் வன்னியர் தெருவை சேர்ந்த கிஷோர்பாபு (21), எண்ணூர் பகுதியை சேர்ந்த டேனியல் (26), செங்குன்றம் சக்திகாந்த மூர்த்தி தெருவை சேர்ந்த வசந்த் (27), தண்டையார் பேட்டை வஉசி நகரை சேர்ந்த அரவிந்தன் (26), சோபன்ராஜ் (26) ஆகியோர் தங்கி இருந்த அறையில் தடை ெசய்யப்பட்ட 450 போதை மாத்திரைகள் இருந்தன.

உடனே போலீசார் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கள் மீது, கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.முக்கிய குற்றவாளியான கிஷோர்பாபு மற்றும் டேனியல் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் மும்பையில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி வந்து பெரம்பூரை சேர்ந்த அசோக்பாய் என்பவர் மூலம் கொடுத்து, ஆட்களை வைத்து சென்னை முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த மோசடி பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து போதை மாத்திரை விற்பனை செய்த கிஷோர்பாபு, டேனியல், சோபன்ராஜ், வசந்த், அரவிந்தன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட 450 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: