கோவையில் விஜயதசமியையொட்டி பக்தர்கள் கத்திபோடும் ஊர்வலம்

கோவை:  கோவையில் விஜயதசமியையொட்டி பக்தர்கள் கத்திபோடும் ஊர்வலம் நடத்தி ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை ராஜவீதி மற்றும் ஆர்.ஜி வீதியில் ஸ்ரீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில்கள் உள்ளன. விஜய தசமி நாளான நேற்று தேவாங்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதைெயாட்டி  கத்தி போடும் ஊர்வலம் ராமச்சந்திரா ரோடு-சர் சண்முகம் ரோட்டில் உள்ள விநாயகர் கோயிலில் துவங்கியது.  இளைஞர்கள் தங்கள் கைகள் மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தியால் வெட்டிக் கொண்டு கன்னட மொழியில் ‘வேசுகோ... தீசுகோ...’ என கோஷம் எழுப்பினர். ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்த உறவினர்கள் மஞ்சள் பொடியை காயங்களின் மீது தூவினர்.

இந்த ஊர்வலம் மேட்டுப்பாளையம் ரோடு, பூ மார்க்கெட் வழியாக சென்று ராஜ வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலை அடைந்தது. அதேபோல ஆர்.ஜி. வீதி, ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன் கோயிலில் துவங்கிய கத்தி போடும் ஊர்வலம் சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை ரோடு விநாயகர் கோவிலில் துவங்கி அழகேசன் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக கோயிலை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: