நீர்மின் நிலையத்தில் குழாய் வெடித்தது

ஹப்லாங்: அசாம் மாநிலம், டிமா ஹசோ மாவட்டத்தில் வடகிழக்கு மின்நிலைய கழகத்துக்கு சொந்தமான கோபிலி நீர் மின் நிலையம் கடந்த 1976ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, 275 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள நீரேற்று நிலையத்தின் குழாய் மூலமாக வினாடிக்கு 12,000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நீரேற்று நிலையத்தில் அதிக அழுத்தம் காரணமாக தண்ணீர் குழாய் வெடித்தது. இதில் வடகிழக்கு மின்நிலைய கழகத்தில் பணியாற்றும் மூவர் உள்பட நான்கு பேர் காணாமல் போயினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: