ஐக்கிய ஜனதா தளம் தேசிய தலைவராக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

புதுடெல்லி: பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்த சரத் யாதவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் அக்கட்சியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் கை ஓங்கியது. கடந்த 4-10-2016 அன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றபோது, அக்கட்சியின் தேசிய தலைவராக இருந்த சரத் யாதவுக்கு பதிலாக பீகார் முதல் மந்திரி  நிதிஷ் குமார் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாண்டுகளுக்கான இந்த பதவிக்காலம் முற்றுப்பெறுவதை முன்னிட்டு மீண்டும் தேசிய தலைவர் பதவிக்கு நிதிஷ் குமார் கடந்த 4-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஐக்கிய ஜனதா தளம் தேசிய தலைவராக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அனில் ஹெக்டே இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் 4-10-2022 வரை அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் நிதிஷ் குமார் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: