டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: பொருளாதார மந்த நிலை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்...!

டெல்லி: டெல்லியில் மாலை 6.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது. இதனிடையே நாட்டின் தொழில்துறை உற்பத்தி புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பீகாரில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் அம்மாநில மக்களை கடுமையாக பாதித்துள்ளது. மழை குறைந்துள்ள நிலையில் குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பீகாரின் மழை, வெள்ள பாதிப்பு குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜம்மு -காஷ்மீர் நிலவரம் குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: