கொல்கத்தாவில் அமித்ஷா அறிவிப்பு மேற்கு வங்கத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு

கொல்கத்தா:  அசாமில் நடந்த தேசிய குடிமக்கள் பதிவேடு பணியில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு, படிப்படியாக பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறிவந்தது.  ஆனால், மேற்குவங்க மாநிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரைத்து வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது:தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மேற்கு வங்க மக்களிடம் தவறான தகவல்கள்  பரப்பப்படுகின்றன. இந்துக்கள், சீக்கியர்கள், புத்த சமூகத்தினர் என எந்த சமூகத்தினரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை வராது என நான்  உறுதியளிக்கிறேன். அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதோடு, இந்தியர்களுக்கான அனைத்து  உரிமைகளையும் பெற முடியும். ஆனால், சட்ட விரோதமாக ஊடுருவியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

Related Stories: