மத்திய பாஜ அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பகல் 1 மணி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு கல்வித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் இந்துத்துவா கோட்பாடுகளை புகுத்தி வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் தத்துவ இயல் பாடப்பிரிவில் பகவத் கீதையை ஒரு பாடமாக வைத்து அது விருப்பப்பாடம் என்று மத்திய அரசு மழுப்ப பார்க்கிறது. பொறியியல் கல்லூரியில் பகவத் கீதையை படிக்க வேண்டிய அவசியம் என்ன?, இது ஒரு மதம் சார்ந்தது. இது திட்டமிட்ட இந்துத்துவா திணிப்புக்கான முயற்சி. இது விருப்பப்பாடமாக  இருக்கக்கூடாது. அடியோடு நீக்கப்படவேண்டும். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரசாரம் செய்ய செல்வேன். நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: