சென்னை: சம இரவு நாள் (Equinox) என்று அழைக்கப்படும் சம இரவு, சம பகல் பொழுது நிகழ்வு என்பது பூமத்திய ரேகையை சூரியன் கடந்து செல்லும் நாளாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 முறை இது போன்ற நிகழ்வு ஏற்படுகிறது.இந்த நாட்களில் இரவு 12 மணி நேரமாகவும், பகல் 12 மணி நேரமாகவும் இருக்கும். சம இரவு, சம பகல் நாட்கள் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், பூமத்திய ரேகையை எவ்வளவு தூரம் தள்ளி சூரியன் இருக்கிறது என்பதை கணக்கிடும் முறை. குறிப்பாக மார்ச் 20ம் தேதியும் செப்டம்பர் 22ம் தேதியும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படும். இந்த ஆண்டுக்கான சம இரவு, என்பது செப்டம்பர் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை கணக்கிடப்படுகிறது.