பலாத்கார வழக்கில் கைதானவர் லக்னோ மருத்துவமனையில் சின்மயானந்தா அனுமதி

ஷாஜகான்பூர்:  சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சின்மயானந்தா (73) மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறினார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறப்பு விசாரணை குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்தது. சிறப்பு விசாரணை குழு ேபாலீசார் கடந்த வெள்ளியன்று சின்மயானந்தாவை திடீரென கைது  செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் சின்மயானந்தா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவரை லக்னோ சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் அவருக்கு  உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சைக்காக பரிந்துரை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் லக்னோ சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: