பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: மாணவன் கைது

துரைப்பாக்கம்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சோழிங்கநல்லூரில் தங்கி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவேஷ் (23) என்பவர், அம்பத்தூரில் தங்கி, அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விவேஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு சோழிங்கநல்லூர் சென்று உதவி பேராசிரியையை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றார். கிழக்கு கடற்கரை சாலை பூஞ்சேரி பகுதி அருகே சென்றபோது ஒரு மறைவான இடத்தில் நிறுத்திய விவேஷ், அந்த பேராசிரியையிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். மேலும், இதனை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதற்கு பேராசிரியை எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சமாதானம் செய்த விவேஷ், சோழிங்கநல்லூருக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றார். பின்னர், அவர் செல்போனில் எடுத்த படத்தை வைத்து பேராசிரியையை மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து பேராசிரியை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விவேஷை கைது செய்தனர்.

Advertising
Advertising

* கொளத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் மணி (50) நேற்று முன்தினம் இரவு நியூ ஆவடி ரோடு வழியாக லாரியில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், மணியை வழிமறித்து செல்போனை பறித்து சென்றனர்.

* கடலூரை சேர்ந்த முருகேசன் (48), மதுரவாயலில் தங்கி சாலையோரம் சர்பத் கடை நடத்தி வந்தார். இவர், நேற்று காலை பணியில் இருந்தபோது, மாநகர பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

*  கோவூர் மூகாம்பிகை நகர் முதல் தெருவை சேர்ந்த லிங்கேசன் (60) நேற்று முன்தினம் இரவு தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி இறந்தார்.

*  துரைப்பாக்கம் சூளைமா நகரில் கஞ்சா விற்ற சிதம்பரம் (24) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: