மருதாநதி அணையில் ஆபத்தான குளியல்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையத்தில் உள்ள மருநாநதி அணையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு, அணை பகுதியில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்த அணையின் 72 அடி உயரமாகும். அணைக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் சுமார் 10 அடிக்கு தண்ணீரும், 20 அடிக்கு சேறும், சகதியுமாகவும் உள்ளது.

இந்நிலையில் அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி,  தேவரப்பன்பட்டி, காந்திபுரம், வாடிபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இங்கு வந்து குளிக்கின்றனர். இவர்கள் ஆபத்து அறியாமல் சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் குதித்து விளையாடுகின்றனர். இதனால் மாணவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது. விபரீதத்தை தடுக்க அணை பகுதியில் காவலர்களை நியமிக்க பொதுப்பணித்துறையினர் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: