சிவகுமார் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: கர்நாடக  முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தற்போது கனகபுரா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.வாக உள்ளார். பண மோசடி வழக்கில் கடந்த 3ம் ேததி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட இவர், தற்போது 14 நாள் நீதிமன்ற காவலுக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி சிவகுமார் சார்பில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது,  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம் நடராஜ் நீதிமன்றத்திற்கு வராததை அடுத்து சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கும்படி நீதிபதியை அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டது. இதையடுத்து, இந்த விசாரணையை வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார்.

Advertising
Advertising

Related Stories: