தாழ்த்தப்பட்ட வாலிபர் உயிரோடு எரித்துக்கொலை : காங். கண்டனம்

புதுடெல்லி: உபி.யின் ஹர்டோய் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது தாழ்த்தப்பட்ட வாலிபர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். வேறு சாதியை சேர்ந்த பெண்ணோடு உறவு வைத்திருந்ததால் பெண்ணின் உறவினர்கள் வாலிபரை உயிரோடு எரித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் வாலிபரின் தாயும் உயிரிழக்க காரணமாகிவிட்டதாக கூறப்படுகின்றது.

Advertising
Advertising

காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பாஜ ஆட்சியில் மற்றொரு தாழ்த்தப்பட்டவர்  எரித்துக் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்றது, அவமானமானது. உபி.யில் அரசியல் நோக்கத்தை அடைவதற்காக சமூக கட்டமைப்பானது தாக்கப்படுகிறது. அங்கு பெண்கள், தாழ்த்தப்பட்டோர்,  பிற்படுத்தப்பட்டோருக்கு  பாதுகாப்பு  இல்லை’ என்று கூறியுள்ளார்.

Related Stories: