மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் உடல் உறுப்புகளை பெரிதாக்கும் மாத்திரை, ஊசி கடத்தியவர் கைது

சென்னை: உடல் உறுப்புகளை பெரிதாக்கும் தடை செய்யப்பட்ட மருந்துகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த கொல்கத்தாவை சேர்ந்த ராஜன்மித்ரா (46)  என்பவர் கம்போடியாவுக்கு சென்றுவிட்டு  மலேசியா வழியாக சென்னை வந்திருந்தார். அவரிடம் நடந்த சோதனையில் 8 பார்சல்கள் சிக்கியது. அதில் உள்ள ஒவ்வொரு பார்சலிலும் 900 மருந்து பாட்டில்கள், 400 இன்ெஜக்‌ஷன் பாட்டில்கள் இருந்தன. அந்த மருந்துகளை சோதனைக்கூடத்துக்கு அனுப்பிவைத்தனர். நேற்று பிற்பகல் சோதனையின் முடிவு வந்தது. அந்த மருந்துகள் அனைத்தும் நம் நாட்டில் தடைசெய்யப்பட்டவை. இது ஆண் பெண் உடல்களை கட்டமைப்பது. குறிப்பிட்ட உடல் உறுப்புகளை பெரிதாக்குவதற்கான ஒருவகை போதை  மருந்துகள் என்பது தெரியவந்தன.

இன்ஜெக்‌ஷனையும் மாத்திரைகளையும் போடுவதால் நரம்பு தளர்ச்சி, மாரடைப்பு, வலிப்பு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. மேலும் இதுபோன்ற மருந்து மற்றும் இன்ெஜக்‌ஷன்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.  இதையடுத்து  சுங்க அதிகாரிகள் பயணி ராஜன் மிஸ்ராவை நேற்று மாலை கைது செய்தனர். அவர் கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான  இன்ஜெக்‌ஷன் மருந்து பாட்டில்கள் மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் வெளிநாட்டு மதிப்பு ₹10 லட்சம். ஆனால் நம் நாட்டின் மதிப்பின்படி சுமார் ₹50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Related Stories: