மயிலாடுதுறை அருகே வடமாநில கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பெண்ணிடம் போலீஸ் விசாரணை

நாகை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வடமாநிலத்தவரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பட்டதாரி பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த கிழியனுரை சேர்ந்த அந்த பெண், காரில் வந்த 3 கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பெண் கடத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

இதனையடுத்து அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டாரை தொடர்பு கொண்ட அந்த பெண், காரில் இருந்தவர்கள் இந்தியில் பேசியதாகவும் தன்னிடம் இருந்த நகைகளை பறித்து கொண்டு கங்களாஞ்சேரி பகுதியில் தன்னை இறக்கிவிட்டு சென்றதாக அவர் கூறினார். அங்கு சென்று பெண்ணை மீட்ட போலீசார், அந்த பெண்ணை கடத்தியவர்கள் யார், உண்மையிலேயே அவர்களுடைய நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: