`உச்ச நீதிமன்றமே எங்களுடையது'என கூறிய பாஜ அமைச்சருக்கு நீதிபதிகள் கண்டனம்

புதுடெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் 22ம் நாள் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்தது.  அப்போது, மூத்த  வழக்கறிஞர் ராஜிவ் தவான், ‘‘தற்போது இந்த வழக்கில் ஆஜராவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை,’’ என்றார். மேலும், தனக்கு மிரட்டல் வந்தது பற்றியும், தனது உதவியாளர் தாக்கப்பட்டது குறித்தும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். மேலும், கடந்தாண்டு உ.பி. அமைச்சர் முகுத் பிகாரி வர்மா, `கோயிலும் உச்ச நீதிமன்றமும் எங்களுடையது என கூறியதை  சுட்டிக்காட்டினார். இதற்காக, ‘அவர் மீது நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை’ என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கருதுகிறீர்களா?’ என கேட்டனர். அதற்கு பதிலளித்த தவான், ‘‘தேவையில்லை. மேலும், நான் ஒருபோதும் இந்து மதத்திற்கு எதிராக வாதம் செய்யவில்லை. நான் ஏற்கனவே கமாக்யா மற்றும் காஷி வழக்கில் கடந்த காலங்களில் ஆஜராகி வாதிட்டுள்ளேன்,’’ என்றார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எங்களுடையது என்று கூறிய உத்தர பிரதேச அமைச்சருக்கு எங்கள் கடும் கண்ட னத்தை தெரிவிக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: