ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரிய நிலையில் இருப்பதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் எதிர்க்கட்சி தலைவர் அரசை தாக்கி பேசி இருந்தாலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது உண்மை தான் என்று கூறியுள்ளார். தோல்பூர், ஆள்வார் அல்லது பிஹார் உள்ளிட்ட பல இடங்களில் சட்ட ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் தான் உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் காவல்துறை பலவீனமாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்துள்ளதாலும் ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா சட்டசபையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் கருத்து உள்துறையை அமைச்சக பொறுப்பை வைத்திருக்கும் அமைச்சர் கெலாட்டை குற்றம் சாட்டும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஜெய்ப்பூரில் சுதந்திர தினத்தன்று பல்வேறு இடங்களில் கல்விச்சு நடந்தது மட்டுமின்றி காவல் நிலையம் ஒன்றுக்கு மர்மகும்பல் தீ வைத்தது. மேலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் விவசாயி பெஹ்லு கான்  கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: