கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிறிஸ் கேல் அதிரடி சதம் வீண்

செயிண்ட் கிட்ஸ்: கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக ஜமைக்கா தல்லவாஸ் அணி வீரர் கிறிஸ் கேல் விளாசிய சதம் வீணானது. வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் இந்த தொடரில், பாசெட்டர் வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் முதலில் பந்துவீசியது. ஜமைக்கா தல்லவாஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. தொடக்க வீரர் கிறிஸ் கேல் 116 ரன் (62 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்), வால்டன் 73 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 8 சிக்சர்), ரஸ்ஸல் 15 ரன் (8 பந்து, 2 சிக்சர்)  விளாசினர்.

Advertising
Advertising

அடுத்து களமிறங்கிய செயிண்ட் கிட்ஸ் 18.5 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. தாமஸ் 71 ரன் (40 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), எவின் லூயிஸ் 53 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்), லாவ்ரி  எவன்ஸ் 37* ரன் (15 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), புரூக்ஸ் 27 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அசத்தினர். கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட், ஜேசன் முகமது டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. எவின் லூயிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

*சிபிஎல் டி20ல் கேல் இதுவரை 156 சிக்சர் விளாசி உள்ளார். வேறு யாரும் 100 சிக்சரை கூட இன்னும் எட்டவில்லை. அனைத்து டி20 போட்டிகளிலும் சேர்த்து 954 சிக்சர் தூக்கியுள்ளார். 1000 சிக்சர் விளாசிய அபூர்வ வீரராக சாதனை  படைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Stories: