சென்னை விமான நிலையத்தில் 62 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: மலேசியா பெண் உள்பட 4 பேர் கைது

சென்னை: மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் திருச்சியை சேர்ந்த விஜயராகவன் (33) என்பவர் மும்பையில் இருந்து வந்திருந்தார்.  அவரை அதிகாரிகள் விசாரித்தபோது, ‘‘நான் உள்நாட்டு பயணி. என்னை சோதனையிட கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அவரது கைப்பையை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் கருப்பு கார்பன் பேப்பரில்  சுற்றப்பட்டு 12 லட்சம் மதிப்பில் 300 கிராம் எடை கொண்ட தங்கம் இருப்பது தெரிந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து விஜயராகவனை கைது செய்தனர்.  இதற்கிடையே நேற்று காலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஏர் ஏசியா விமானத்தில் காலை 8.30 மணிக்கு மலேசியாவை சேர்ந்த நூர்லினா (40) சென்னை வந்திருந்தார்.

அவரது நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்டை கழட்டி பார்த்தனர். பெல்ட் அணியும் பகுதி தடிமனாக இருந்ததால் தையலை பிரித்து பார்த்தபோது 4 சிறுசிறு தங்க கட்டிகள் மறைத்து  வைத்திருந்தது தெரிந்து அதை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 555 கிராம். அதன் மதிப்பு 23.5 லட்சம். மேலும் பெண் பயணி நூர்லினாவை கைது செய்தனர். மேலும் அதே விமானத்தில் மலேசியாவில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த ஹாரூன்ரசீத் (46), ரிஸ்வான்பசூல் ஹத் (34) ஆகிய 2 பேர் உள் ஆடைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த 26.5 லட்சம் மதிப்பிலான 670 கிராம் தங்க கட்டிகள் மற்றும்  உபயோகப்படுத்திய ₹1 லட்சம் மதிப்பிலான 20 லேப்டாப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: