இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: இந்திய பொருளாதாரமானது மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மோடி அரசு பதிவியேற்று 100 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு டெல்லியில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜி.டி.பி வளர்ச்சி முதல் காலாண்டில் 5 சதவிகிதமாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி, அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியாவால் எட்டமுடியுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த ஜவடேகர் ஜி.டி.பி குறைந்திருப்பது தற்காலிகமானதே என்றும், சுழற்சி முறையில் மீண்டும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் எனவும் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலும் 7 முதல் 8 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி குறைந்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பெரிய பொருளாதார நாடுகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலிமையாக இருப்பதால் 5 லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை இந்தியாவால் எட்ட முடியும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: