‘சிக்ஸர்’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ்

சென்னை: சிக்ஸர் பட தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘சின்னதம்பி படத்தில் மாலை 6 மணிக்கு மேல் கவுண்டமணிக்கு கண் தெரியாது என நகைச்சுவைக்காக படைக்கப்பட்ட கேரக்டர், சிக்ஸர் படத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது புகைப்படம் மற்றும் அவர் கூறிய வசனங்கள் ஆகியவை தவறான முறையில்  பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கு அவரது அனுமதி பெறவில்லை. உடனடியாக  அந்தக் காட்சியை நீக்கி அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்,  சிக்ஸர் படக்குழுவினர் மீது குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றத்தில்  அவதூறு வழக்கு தொடரப்படும்’.

Related Stories: