செம்மரக்கட்டை 2 டன் பறிமுதல்

சென்னை: சென்னை மண்ணடி மூர் தெருவில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பூக்கடை போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்றுமுன்தினம் இரவு மேற்கண்ட குடோனில், வடக்கு கடற்கரை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, முகமது வுக்கு சொந்தமான குடோனில் 2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. ேபாலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்த 2 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, மண்ணடியை சேர்ந்த நவாப்பை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள  அலாவுதீன் (35), நைமுதீன் (36) ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: