வருகிறது 6 புதிய எலெக்ட்ரிக் பைக்

மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட போலரிட்டி நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் பணிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் புதிய  எலெக்ட்ரிக் பைக் மாடலானது சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்திற்குள் 6 புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புதிய  மாடல்களில் லித்தியம் அயான் பேட்டரி மற்றும் ஒன்று முதல் 3 kW திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும்.இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் ஸ்போர்ட் மற்றும் எக்ஸிகியூட்டிவ் என்ற இரண்டு ரகத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஸ்போர்ட் குடும்ப வரிசையில் S1K, S2K மற்றும் S3K ஆகிய மாடல்களும், எக்ஸிகியூட்டிவ்  வரிசையில் E1K, E2K மற்றும் E3K ஆகிய பெயர்களிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் என்றாலே, பேட்டரி சார்ஜ் தீர்ந்து போகும் என்ற அச்சம் எழும். இதற்கு தீர்வாக, பெடல் மூலமாக அதிவேகமாக இந்த  பைக்குகளை இயக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. அதாவது, சைக்கிள்போல் மிதித்துக்கொண்டும் செல்ல முடியும்.

Advertising
Advertising

இந்த மாடல்கள் மணிக்கு 100 கி.மீ வேகம் வரை செல்லும். நகர்ப்புற பயன்பாடு மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கும் ஏதுவானதாக இருக்கும். இந்த பைக்குகள் ஒற்றை இருக்கை அமைப்புடன் வர இருக்கின்றன. இந்த  பைக்குகளில் மோனோ ஷாக்அப்சார்பர் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன், அட்ஜெஸ்ட் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்குகளின் பிரேமிலேயே லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் டர்ன்  இண்டிகேட்டர்கள் மிகவும் கச்சிதமாகவும், கேடிஎம் பைக்குகளை நினைவூட்டுவது போலவும் இருக்கிறது.இந்த எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு நேரடி போட்டியாளர்கள் தற்போது வரை இல்லை. இந்த பைக்குகள், கான்செப்ட் மாடலில் இருந்து தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பைக்குகளுக்கு ₹1001 முன்பணத்துடன் ஆன்லைனில்  முன்பதிவு ஏற்கப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: