அமலாக்கத் துறை கைது செய்ய தடை

புதுடெல்லி: ஐஎக்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து கடந்த 21ம் தேதி ப.சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்ட நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வரும் என்று பட்டியலிப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரது அமர்வு முன்பு  நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முன்ஜாமீன் தொடர்பான வழக்கை வரும் 26ம் தேதி விசாரிப்பதாக வழக்கை ஒத்திவைத்தனர். இதைத் தொடர்ந்து, இதே வழக்கில் அவரை கைது செய்ய அமலாக்கத்துறையும் அனுமதி கோரியது. இதை நிராகரித்த நீதிபதிகள், ‘சிதம்பரத்திடம் சிபிஐ காவலில் விசாரணை நடப்பதால், வரும் 26ம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது,’ என உத்தரவிட்டனர்.

Related Stories: