சீர்காழி ஒன்றியத்தில் ரூ.1.50 கோடியில் 140 குளங்கள் தூர்வாரும் பணி துவக்கம்

சீர்காழி: சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 140 குளங்கள் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சியாக சீர்காழி அருகே நாங்கூர் ஊராட்சியில் அமைந்துள்ள வைகுந்தநாத பெருமாள் கோயில் குளம் தூர்வாரும் பணி தொடங்கியது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, வேளாண்மை கூட்டுறவு வங்கி, தலைவர்கள் ராஜமாணிக்கம் போகர்ரவி, மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய பொறியாளர் முத்துகுமார் வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பாரதி கலந்து கொண்டு தூர்வாரும் பணி தொடக்கி வைத்து பேசினார். இதில் ஒன்றிய ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திருமாறன், கட்டிட சங்கத் தலைவர் ராஜ்மோகன், வழக்கறிஞர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.

Related Stories: