அம்மா குடிநீர் மையத்தில் ஊழியர் திடீர் தற்கொலை

பெரம்பூர்: தண்டையார்பேட்டை அகத்தீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (51). இவருக்கு யோகலட்சுமி (45) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிக்குமார், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கும்மாளம்மன் கோயில் தெரு சந்திப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா குடிநீர் விநியோக மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தவர் இரவு வீடு திரும்பவில்லை. உடனே, உறவினர்கள் அவர் வேலை செய்யும் இடத்தில் வந்து பார்த்தபோது  விநியோக மையத்தின் அறையில் ரவிக்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.

Advertising
Advertising

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், ரவிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: