பஸ்சுக்கு காத்திருந்த நபரிடம் வழிப்பறி

அண்ணாநகர்: சென்னை பெரியமேடு பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (21). அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் கேசியராக வேலை செய்கிறார். இவருக்கு சமீபத்தில் திருமணமானது. ஆடி மாதம் என்பதால் ஜெயகுமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை பார்க்க ஊருக்கு செல்ல நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 மர்ம நபர்கள், ஜெயக்குமாரை சரமாரி தாக்கி அவர் அணிந்திருந்த 2 சவரன் நகை, ₹10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: