ரணங்களாய் தொடரும் மரணங்கள்... அதிகரிக்கும் விபத்துகளால் கதிகலங்கும் தமிழகம்

*விதிகளை கடைபிடித்தால் மட்டுமே மாறும் தலைவிதி

சேலம் : ஒரு  காலத்தில் அரிதாக நடந்த சாலை விபத்துகள், தற்போது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. தினமும் ஒரு விபத்தையாவது கடந்து  செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ‘‘மித வேகம் மிக நன்று, வளைவில்  முந்தாதே, சாலை விதிமுறைகளை மதிப்போம், விபத்தினை தவிர்ப்போம், உன் உயிர் உன் கையில்’’ என்று  விழிப்புணர்வு பதாகைகள் ஒரு பக்கம் பாடம் புகட்ட, அதன் மீதே மோதி  விபத்தில் சாய்ந்து கிடக்கும் உயிர்களை, கண்கள்  பார்த்துச்  செல்வது காலக்கொடுமை.

விபத்து என்பது ஒருவரை மட்டுமன்றி, தம்மை நம்பிய உயிர்களையும் பரிதவிக்க விடும் பரிதாபத்தின் உச்சம். ஒரு குடும்பத்தின் ஆணிவேரான தலைவனோ, தலைவியோ திடீரென  விபத்தில் இறக்கும் போது, அந்த  குடும்பம் நிலைகுலைந்து நிர்க்கதியாகிறது. நம்பி நிற்கும் விழுதுகளின் தலைவிதியை மாற்றி விடுகிறது.  உயிரிழப்பு பெரும் துயரம் என்றால், படுகாயம் பெருங்கொடுமை. விபத்துகளில் உறுப்புகளை இழந்த பலர், திறமை இருந்தும் ஜொலிக்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள்  என்ற பெயருடன், தேவைகளுக்கு பிறரது உதவியை எதிர்பார்த்து  காத்திருப்பது உயிரை மெல்ல.மெல்ல...உருக்கும் (ம)ரணம்.

alignment=

இந்தியாவில் தினம்தோறும் சராசரியாக  1,214  சாலை விபத்துக்களும், ஆண்டுக்கு சுமார் 1,20,000 ஆயிரம்  விபத்துக்களும்  நடக்கின்றன. அதில் தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக  ஆண்டுக்கு சராசரியாக  15 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடக்கிறது. மொத்த விபத்துக்களில் 25.9 சதவீத   விபத்துக்கள் இரு சக்கர வாகனங்களாலும், 25.6 சதவீத விபத்துக்கள் கார், ஜீப்   போன்ற வாகனங்களாலும் ஏற்படுகிறது. கனரக வாகனங்களால் நிகழும்  பொதுவிபத்துகள் 7.9 சதவீதமாகும். இதர விபத்துகள் பல்வேறு சூழல்களில்  நடக்கிறது என்பது புள்ளி விபரத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.

alignment=

தமிழகத்தை  பொறுத்தவரை, கடந்தாண்டில் (2018) 63  ஆயிரத்து 920 விபத்துக்கள்  நடந்துள்ளது. இதில் 12,216 பேர்  இறந்துள்ளனர். 74,537  பேர் படுகாயமடைந்துள்ளனர். சேலம் சரகத்தை பொறுத்தவரை சமீபத்திய நிலவரப்படி  (ஆக.,13) சேலத்தில் 182 பேரும், நாமக்கல்லில் 226 பேரும்,  தர்மபுரியில்  98 பேரும், கிருஷ்ணகிரியில் 225 பேரும் என்று, மொத்தம் 731  பேர்  உயிரிழந்துள்ளனர். போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத சாலைகளில் அசுர வேகம்,  போக்குவரத்து விதிமுறைகளை அறவே கடைபிடிக்காதது,  மது போதையில் வாகனங்களை  ஓட்டி செல்வது, செல்போனில் பேசிக்கொண்டே செல்வது போன்றவை தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாகும். விபத்தை தடுக்க போக்குவரத்து  சட்டத்தில் கடுமையான  விதிமுறைகள் இருப்பினும், அதிகாரிகள் அதை முறையாக  அமல்படுத்துவதில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. இதனால் தான்,  தமிழகம் தொடர்ந்து  சாலை விபத்துகளில் முந்திக்கொண்டிருக்கிறது என்பது  வேதனை.

நொடிப்பொழுதில் ஏற்படும்  விபத்துகளையும், அதன் விபரீதங்களையும் தவிர்க்க  வேண்டும் என்ற சிந்தனையை  எண்ணத்தில் மட்டுமன்றி, ஒவ்வொருவர் உள்ளத்திலும்  நிலைபெறச் செய்ய வேண்டும். மொத்தத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது மட்டுமே வாகனம் ஓட்டுபவர்களின் தலைவிதியை மாற்றுவதோடு, தொடரும் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்  என்கின்றனர் சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள். ஒரு வழிப்பாதையில் எமனாகும்

alignment=

வாகனங்கள்: இந்தியாவில்  பெரும்பாலான சாலைகள் 4 வழிச்சாலையாகவும், ஒரு வழிச்சாலையாக   மாற்றப்பட்டுள்ளன. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் குறுகிய நேரத்தில் செல்ல   ஒரு வழிச்சாலையில் எதிர்புறமாக வாகனங்களில் வருகின்றனர்.

இதுபோன்ற   வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இரவு நேரங்களில் வாகனங்களை  சாலையின் ஓரத்தில் நிறுத்திக்கொள்கின்றனர். இரவில் வேகமாக வரும்  வாகனங்கள்  சாலையோரம் வாகனம் இருப்பது தெரியாமல் மோதி விடுகின்றன. இதில் பலர்  உயிர்  இழக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 80 முதல் 100 கிலோமீட்டர் தூரத்தில்,  லாரிகள் நிறுத்துவதற்காக  தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்  பெரும்பாலான லாரி ஓட்டுனர்கள், அதற்குரிய இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல்,  அலட்சியமாக சாலையோரத்தில்  நிறுத்தி விடுகின்றனர். இதுவும் விபத்துக்கு  காரணம் என்பது போக்குவரத்து போலீசாரின் வேதனை.

தடுப்புச்சுவர் உயரம் அதிகரிப்பது நல்லது : இந்தியாவில்   இரு வழிச்சாலையாக இருந்த பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள், 4 வழிச்சாலையாக   மாற்றப்பட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் நடுவே ஒன்றரை அடி   உயரத்திற்கு தடுப்புச்சுவர் எழுப்பட்டது. அதன்பிறகு பெரும்பாலான தேசிய   நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே இருக்கும் சாலையை பெயர்த்து எடுக்காமல், அதன்மீதே   தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரோடும்,  தடுப்புச்சுவரும்  ஒரே மட்டத்தில் இருக்கின்றன. இதனால் விபத்து  நடக்கும்போது, வாகனம்  எதிர்புறமாக வரும் வாகனத்தின் மீது மோதி பெரிய  அளவில் விபத்தை  ஏற்படுத்துகின்றன. தடுப்புச்சுவர் உயரம் அதிகமாக  இருந்தால், வாகனம்  ஏற்படும் போது, அந்த இடத்தில் வாகனம் நின்று விடும்.  விபத்துக்களையும்  தவிர்க்கலாம்.

அலற விடும் ஹாரன்கள் அதிகரிக்கும் பாதிப்புகள்

‘‘இளைஞர்களை பொறுத்தவரை அசுர ேவகத்தில் வாகனம் ஓட்டுவது பேஷனாகி விட்டது. விடுமுறை நாட்களில் ேரஸ் என்ற பெயரில் சிலர், அதிக சத்தத்துடன் ஹாரன்களை அலறவிட்டு மின்னல் வேகத்தில் பறக்கின்றனர். இதேபோல் 90 டெசிபலுக்கு மேல் ஹாரன் ஒலியோடு பறக்கும் வாகனங்களும் விபத்துக்கு வழிவகுக்கிறது. இது மட்டுமன்றி அதிக ஒலியானது காதுகளை செவிடாக்கும். இதய நோயை  உண்டாக்கும். இதயத்துடிப்பை அதிகரிக்கும். தலைவலி மற்றும் சோர்வை  உண்டாகும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நரம்புகளை பாதிக்கும். மனதில்  அச்சத்தை உண்டாக்கும். அதுவே பெரும்பாலான ேநரங்களில் விபத்துகளுக்கும் வழி வகுக்கும்,’’ என்கின்றனர் மருத்துவர்கள்.

alignment=

77.1 சதவீத விபத்துக்கு காரணம் அஜாக்கிரதை

முறையான  பயிற்சி இல்லாமல் வாகனம்  ஓட்டுவது, வாகன விதிமுறைகளை பின்பற்றாமல்  இருப்பது, குடிபோதையில் வாகனம்  ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு வாகனம்  ஓட்டுவது உள்பட பல விதிமீறல்கள் தான் விபத்துக்கு வழிவகுக்கின்றன.  உலகமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 5  லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விபத்தில்  இறக்கின்றனர். இந்தியாவில்  தமிழகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,  கர்நாடகா, கேரளா மற்றும்  உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான விபத்துக்கள்  நடக்கின்றன. 77.1 சதவீத  விபத்துக்கள் ஓட்டுநரின் அஜாக்கிரதையாலும்,  அதிவேகத்தாலும் நடக்கிறது என்பது ஆய்வுகள் கூறும் தகவல்.

அதிகாலையில் அலற விடும் கோர விபத்துகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் கோர விபத்துகள் நடப்பதும் சமீபகாலமாக அதிகரித்து   வருகிறது. இதற்கு தூக்க கலக்கத்தில் டிரைவர்கள் வாகனங்களை ஓட்டுவதே காரணம்.   சராசரியாக மனிதனுக்கு 8மணி நேர தூக்கம் மிகவும் அவசியம். ஆனால்,  கனரக  வாகன ஓட்டுநர்கள், இதை கவனத்தில் கொள்வதேயில்லை. தூக்கம்  கண்ணைத்தழுவும்  நள்ளிரவு தொடங்கி, அதிகாலை நேரங்களிலேயே இவர்கள்  பணியாற்றுகின்றனர்.  இதற்காக அவர்கள் ஓய்வெடுப்பதும் இல்லை. பொருளாதார  தேவைகளை பூர்த்தி  செய்வதற்காக உழைப்பது, அவர்களை உயிரை பறிப்பதோடு, பிற  உயிர்களையும்  பலியாக்கி விடுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான  கோர விபத்துகள், அதிகாலை  நேரத்தில் நடந்தவையே என்பது குறிப்பிடத்தக்கது.

alignment=

பெருகும் வாகனங்களால் உயரும் விபத்து அபாயம்

இந்தியாவில்  30ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில  நெடுஞ்சாலைகளும் இரு வழிச்சாலையாக இருந்தது. சாலையில் வாகனங்களின்  எண்ணிக்கை அதிகரித்தால், விபத்துக்களும் அதிகரித்தது. இந்நிலையில், முன்னாள்  பிரதமர் வாஜ்பாய் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் முதல்  கன்னியாகுமரி வரை தங்க நாற்கரச் சாலைத்திட்டத்தை கொண்டு வந்தார்.  இத்திட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள்,  மாநிலச்சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 20  வருடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்து விட்டது. ஆனால்  அதற்குரிய சாலை கட்டமைப்பும், மேம்பாடும் இல்ைல. இதுவும் விபத்துகள்  அதிகரிக்க முக்கிய காரணம் என்கின்றனர் போக்குவரத்து ஆர்வலர்கள்.

அடித்தளமாகும் ஆர்வக்கோளாறு  

30ஆண்டுகளுக்கு   முன்பு, போக்குவரத்துக்கு பெரும்பாலான வீடுகளில் சைக்கிள் இருக்கும்.   அதிகபட்சமாக ஸ்கூட்டர் இருக்கும். வசதி படைத்தவர்கள்  வீட்டில் காரை  பார்க்கலாம். ஆனால் இன்று பெரும்பாலான வீடுகளில் சைக்கிளை  மறந்து விட்டோம்.  சைக்கிளில் செல்வதை கவுரவக்குறைச்சலாக நினைக்கிறோம். இன்று  வீடுகளில்  ஆளுக்கு ஒரு வாகனம் உள்ளது. இதை  பார்க்கும் குழந்தைகள் சைக்கிள் என்ற  ஒன்றையே மறந்து விட்டனர். ஆர்வக்கோளாறு காரணமாக சிறு வயதிலேயே பைக், கார்  ஓட்ட பழகிக்கொள்கின்றனர். பெரிய வாகனத்தை  இயக்கும் இவர்களுக்கு  பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் இருக்க வாய்ப்பில்லை. இதுவும்  விபத்துகளுக்கு அடித்தளம் அமைத்து விடுகிறது என்கின்றனர் பெரியவர்கள்.

Related Stories: