கூகுள் தேடுதலில் மோடியை மிஞ்சிய நடிகை சன்னி லியோன்

மும்பை: கடந்த ஆண்டை போல நடப்பு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் பிரபல இந்தி நடிகை சன்னி லியோன் தான் என்று கூகுள் அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடிகர்கள் சல்மான் கான், ஷாரூக் கான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை விடவும் அதிகம் பேர் சன்னி லியோனைத்தான் தேடி உள்ளனர் என்றும் கூகுள் வெளியிட்ட அறிவிப்பு கூறுகிறது. பெரும்பாலானோர் சன்னி  லியோன் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத்தான் விரும்பி பார்த்துள்ளனர். மேலும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் கூகுளில் விரும்பி பார்த்துள்ளனர்.

Advertising
Advertising

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியுள்ளனர். குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியதாகவும்  கூகுள் நிர்வாகம் கூறுகிறது. இதுபற்றி நடிகை சன்னி லியோனிடம் கேட்ட போது, தன்னுடைய ரசிகர்கள்தான் இந்த பெருமைக்கு காரணம் என்றும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் சன்னி  லியோன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: