இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மூத்த தலைவர் டி.ராஜா தேர்வு

டெல்லி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மூத்த தலைவர் டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி பதவி விலகியதை அடுத்து மூத்த தலைவர் டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: