அசத்தும் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 5 சீரிஸ் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. மேலும், ஜெர்மனியில் உள்ள பெர்லின் ஸ்பன்டவ் பகுதியில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையின் 50வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி பைக்கின் விசேஷ பதிப்பு மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. 1969ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மோட்டார் சைக்கிளின் பாரம்பரிய அம்சங்களை உள்ளடக்கியதாக புதிய ஆர் நைன் டி/5 பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Advertising
Advertising

சில்வர் மற்றும் கருப்பு வண்ணத்திலான உதிரிபாகங்களுடன் பழைய 5 சீரிஸ் பைக்கை நினைவூட்டும் வகையில் இந்த சிறப்பு பதிப்பு மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சைடு மிரர்கள், புகைப்போக்கி குழல்கள் ஆகியவற்றில் குரோம் பூச்சுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த பைக் தோற்றத்தில் தனித்துவத்தை பெற்றுள்ளது. அலுமினிய ஹப், ஸ்போக்ஸ் சக்கரங்கள், முன்புற போர்க்குகளில் ரப்பர் இணைப்பு ஆகியவையும் பழமையை நினைவூட்டுவதாக இருக்கின்றன. ஹீட்டட் இருக்கை, ஹேண்டில்பார் கிரிப்புகளும் இதன் பிரிமீயம் அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் ஆர் நைன்டி பைக்கில் இருக்கும் அதே 1,170 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தோற்றத்தில் பழமையை நினைவூட்டினாலும், நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி/5 பைக்கில் ஆட்டோமேட்டிக் ஸ்டெபளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய முக்கிய பாதுகாப்பு விஷயங்களாக இருக்கின்றன. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: