ரேணிகுண்டா அருகே கோவை நகை வியாபாரியிடம் போலீஸ் சீருடையில் கொள்ளை: 3 பேர் கைது

ரேணிகுண்டா: கோயம்பத்தூரில் இருந்து வந்த ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் 11ம் தேதி பாகாலா ரயில் நிலையம் வந்த தங்க வியாபாரி முகுந்தராஜ் என்பவரிடம் போலீசார் உடையில் சோதனையிட்ட இருவர் கள்ளத்தனமாக தங்கம் வியாபாரம் செய்வதாக கூறி மிரட்டியுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து ரயிலில் இருந்து அவரை கீழே இறக்கி ரயில்வே காலனிக்கு அழித்து சென்ற அவர்கள் முகுந்தராஜிடம் இருந்து சுமார் 1 கிலோ 80 கிராம் தங்க நகைகளை பறித்துக்கொண்டனர். இதை தொடர்ந்து உரிய ஆவணங்கள் எடுத்து வந்து சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து சித்தூர் காவல் நிலையத்திற்கு சென்று முகுந்தன் விசாரித்தபோது தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதையடுத்து ரேணிகுண்டா போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர். மேலும் இதில் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த தங்க வியாபாரியான சேகர் சிக்கினார். இதை தொடர்ந்து பல நாட்களாக முகுந்தனை நோட்டம் விட்ட சேகர் ராணுவத்தில் பணிபுரியும் புல்லாரெட்டி என்பவருக்கும் பிரசாத் என்பவருக்கும் காவல் சீருடை அணிவித்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது. இதனை தொடர்ந்து இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த ரேணிகுண்டா போலீசார் தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய சீருடை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: