துணி வியாபாரிகள் போல் நடித்து 1.1 கோடி தங்கம் கடத்திய 11 பேர் கைது: ஒரே நாளில் சென்னை திரும்பியதால் சிக்கினர்

சென்னை: இலங்கையில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த 11 பேர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து இலங்கை–்கு புறப்பட்டு சென்று, அடுத்த நாளே  சென்னை திரும்பியது தெரிந்தது.இதனால் அதிகாரிகள் சந்தேகத் தின் பேரில், 11 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று, அவர்களது ஆடைகளை களைந்து சோதனை செய்தனர். அதில் 7 பேரது உள்ளாடைகளிலும், 4 பேரது ஆசன வாயில் பிளாஸ்டிக் பார்சல் மூலம் தங்கம்  மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். மொத்தம் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு 1.1 கோடி.தொடாந்து அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த அமீது பாதுஷா (23), மீரான் உசேன் (43), ராமநாதபுரம் முகமதுஇப்முது (25), கலந்தர் சையதுஅலி (40), தொண்டியை சேர்ந்த சேக் அப்துல்லா (36), சவுகத்அலி (40),  மதுரை சையது இ்ஸ்மாயில (32), ராமேஸ்வரம் பாதுஷா (24), கீழக்கரை முகமது ரியாஸ் (25), எஸ்பி பட்டினம் சாகுல்அமீது (38), அல்லாபிச்சை (29) ஆகியோர் என தெரிந்தது.

மேலும் விசாரணையில், சென்னையை சேர்ந்த பெரும் கடத்தல் ஆசாமி, மேற்கண்ட 11 பேரை நேற்று முன்தினம் தனது சொந்த செலவில் இலங்கை–்கு அனுப்பினார். அப்போது அவர்களிடம் லுங்கி, நைட்டி உள்ளிட்டவைகளை கொடுத்து வியாபாரிகள் போல் அனுப்பி, அங்கிருந்து தங்கத்தை கடத்தி வர செய்துள்ளார். இதனால், இவர்கள் அனைவரும் கடத்தலுக்கு உதவிய குருவிகள் என தெரிந்தது.

Related Stories: