பழத்திற்குள் வெடிகுண்டு கடித்த ஆடு பரிதாப பலி

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பத்மநேரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி வெற்றிவேல் (62). ஊருக்கு வடக்கே அரசு புறம்போக்கு நிலத்தில் தனது ஆடுகளை 2 நாட்களுக்கு முன் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கிடந்த ஒரு கொய்யா பழத்தை ஒரு  ஆடு தின்ற போது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த ஆடு பலியானது. அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது கொய்யா பழத்திற்குள் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் 2 கொய்யா பழத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். …

The post பழத்திற்குள் வெடிகுண்டு கடித்த ஆடு பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: