ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் எங்கள் தேச நலனுக்கு வேண்டியதை செய்வோம்: அமெரிக்காவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

புதுடெல்லி: ‘ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் எங்கள் தேச நலனுக்கு வேண்டியதை செய்வோம்,’ என அமெரிக்காவுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்  பாம்பியோ, நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். நேற்று காலை பிரதமர்  மோடியை சந்தித்து பேசினார்.  பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பேற்றதை  தொடர்ந்து இருநாடுகள் இடையே நடைபெறும் முதல் உயர்மட்ட அளவிலான  பேச்சுவார்த்தை இதுவாகும். அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட  ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்ய ஒப்பந்தம்  செய்துள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இது தவிர தீவிரவாதம்,  எச்1 பி விசா பிரச்னை, அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள  ஈரானிடம் இருந்து எண்ெணய் வாங்குதல் போன்ற பிரச்னைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்ைத நடத்தினர்.

Advertising
Advertising

 தொடர்ந்து,  பிற்பகலில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன், பாம்பியோ  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், எரிசக்தி, தீவிரவாதம்  உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  பின்னர் அமைச்சர்  ஜெய்சங்கரும், பாம்பியோவும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, ஜெய்சங்கர் கூறுகையில், `‘வளைகுடா நாடுகள், வர்த்தகம், எரிசக்தி, இந்தோ -  பசிபிக், ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினோம்,’’  என்றார்.  பின்னர், ரஷ்யா உடனான எஸ்- 400 ஏவுகணையை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதிலில், ‘‘அமெரிக்க வெளியுறவு மைச்சர் பாம்பியோவுக்கு ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தம் தொடர்பாக சில விளக்கத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எங்களுக்கு பல உறவுகள் உள்ளன. எங்களுடைய உறவுகளுக்கு ஒரு வரலாறு உண்டு. எங்களுடடைய தேச நலனுக்கானதை நாங்கள் செய்வோம். ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் தேச நலனைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். இந்தியா -அமெரிக்க நட்பு என்பது அழமான, பரந்த ஒருங்கிணைப்பை அடிப்படையாக கொண்டது,’’ என்றார்.

Related Stories: