ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 705 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன எனவும், தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன என்றும் தகவல் அளித்துள்ளது. மேலும் நிலத்தடி நீர் பாதிப்பு  உள்ளிட்ட மக்களின் அச்சங்களை போக்க ஓஎன்ஜிசி நடவடிக்கை எடுத்துவருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: