பீகாரில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குப்பைத்தொட்டியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

பீகார்: பீகாரில் மூளைக்காய்ச்சல் நோய்க் காரணமாக 174 குழந்தைகள் உயிரிழந்த சோகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முசாப்பூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பின்பக்க வாயில் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட மருத்துவமனை உயிரிழந்தோரின் உடல்களை ரகசியமாக புதைத்து இருக்கலாம் என்று சர்ச்சை எழுந்தது. ஆனால் அவை யாரும் உரிமைக்கோராத நோயாளிகளின் எலும்புகள் என்று முசாப்பூர்மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சட்டரீதியான நடைமுறைகளை முடித்தப் பின்னர் அந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரேத பரிசோதனை அறையில் உடல்களை 72 மணி நேரம் மட்டுமே வைக்க அனுமதிக்கப்படுவதால் யாரும் உரிமைக்கு கோராத உடல்களை இப்படி அடக்கம் செய்வது வழக்கம் தான் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தகைய உடல்களின் இறுதி சடங்கிற்காக 2000ரூபாய் உதவி தொகை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: