திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ராஜினாமா

திருமலை: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து புதிதாக ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது. வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்றவுடன் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட திருப்பதி அறங்காவலர் குழு கலைக்கப்படுவதற்கு முன்பு அதன் தலைவர்கள் ராஜினாமா செய்வது வழக்கம்.  ஆனால் தற்போதைய திருப்பதி அறங்குழு தலைவர் சுதாகர் யாதவ், ராஜினாமா செய்ய மறுத்தார். இந்நிலையில்  சுதாகர் யாதவ் தேவஸ்தானம் சார்பில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தனது தலைவர் பதவியை பயன்படுத்தி முறைகேடாக பணியாளர்களை சேர்க்க வேண்டுமென மருத்துவமனை இயக்குனர் ரவிக்குமாருக்கு அழுத்தம் கொடுத்ததாக தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலிடம், ரவிக்குமார்  எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தார்.  இந்த பரபரப்புக்கு இடையே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை புட்டா சுதாகர் யாதவ் நேற்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலுக்கு அவர் பேக்ஸ் மூலமாக அனுப்பினார்.

Related Stories: