ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு நிபா வைரஸ் இல்லை: புனே மருத்துவ ஆராய்ச்சி உறுதி

புதுச்சேரி: கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடராஜன் என்பவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்க்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடைப்படையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் புதுசத்திரத்தை சேர்ந்தவர் நடராஜன், இவர் கூலி தொழிலாளி ஆவர். இவர் கேளர மாநிலம் குருவாயூரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்க்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது சொந்த ஊரான புதுசத்திரத்திற்கு வந்து கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி மாலை அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் கேரளாவிலிருந்து வந்திருப்பதாகவும், காய்ச்சல் அதிகரித்துள்ளதாலும் அவர்க்கு நிபா வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் அவரை தனி பிரிவில் சேர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மேலும் அவருக்கு நிபா வைரஸ் உள்ளதா என்பதை உறுதி செய்ய ரத்த மாதிரி கொண்டு வந்து புனே மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து கிட்டத்தட்ட 4 நாட்களாக அந்த ஆராய்ச்சி செய்யப்பட்டு தற்போது ஆராய்ச்சியின் முடிவானது வெளியாகியுள்ளது. மேலும் நடராஜனுக்கு நிபா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு வைரஸ் காய்ச்சல் உள்ளதாகவும் உரிய சிகிச்சை அளித்தார் அந்த வைரஸ் காய்ச்சலை நீக்கி விடலாம் என்று மருத்துவர்கள் ஜிப்மர் நிர்வாகத்திற்கு தெரிவித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 4 நாட்களாக ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பதாக வதந்திகள் வந்த நிலையில் தற்போது நிபா வைரஸ் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூரிலும், புதுச்சேரியிலும் ஒரு நிம்மதியான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் நிபா வைரஸ் குறித்த அச்சமும் அங்கு நீங்கியுள்ளது.

Related Stories: