பாஜகவுக்கு ஒருவரே 5 முறை வாக்களித்ததாக புகார்: அசாம் வாக்குச்சாவடியில் வீடியோ வெளியானதால் சர்ச்சை

திஸ்பூர்: அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவரே 5 முறை வாக்களிக்கும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் விளக்கம் கோரியுள்ளது. அசாமின் கரீம்கஞ்சு தொகுதியில் கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடி முகவர் அப்துல்ஷாகீர் என்பவர் பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் 5 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. சுயேட்சை வேட்பளாரின் வாக்குச்சாவடி முகவர் பாஜகவுக்கு 5 முறை வாக்களித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து விளக்கம் அளிக்க கோரி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ அது என வாக்குச்சாவடி அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளில் முழுமையாக நீக்கிய பிறகே வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post பாஜகவுக்கு ஒருவரே 5 முறை வாக்களித்ததாக புகார்: அசாம் வாக்குச்சாவடியில் வீடியோ வெளியானதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: