கேஆர்எஸ் அணையில் காவிரி ஆணையம் ஆய்வு

மண்டியா: கேஆர்எஸ் அணையை மத்திய நிபுணர் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். காவிரி நீர் பங்கீடு  தொடர்பாக கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் இடையே  பிரச்னை இருந்து வருகிறது. சமீபத்தில் தமிழகத்துக்கு 9 டிஎம்சி தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், தனது அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா மறுத்து வருகிறது.இந்நிலையில், மண்டியா மாவட்டத்தில்  உள்ள கேஆர்எஸ் அணையை பார்வையிட மத்திய காவிரி நீர்  நிர்வாக ஆணைய குழுவினர் நேற்று வந்தனர். அவர்கள் அணையின் நீர்மட்டம், அணையின் ஸ்திர தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். நீர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்தனர். இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி,  ஹாரங்கி அணைகளையும் இக்குழு இன்று பார்வையிடுகிறது. மறுநாள் அதாவது வியாழக் கிழமை  கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள   நிலைமையையும் ஆய்வு செய்ய இவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories: