தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த தென் ஆப்ரிக்க அணி வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் (35 வயது), உலக கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஸ்டெயின், அதன் பிறகும் முழு உடல்தகுதி பெற முடியாமல் தடுமாறி வந்தார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் டி20 தொடரிலும் அவர் இதே பிரச்னை காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.