ஆந்திராவில் சி.பி.ஐ அரசு விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தார் ஜெகன்மோகன் ரெட்டி

ஹைதராபாத் :ஆந்திராவில் சி.பி.ஐ அரசு விசாரணை நடத்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விதித்த தடையை ரத்து செய்து புதிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்திரவிட்டுள்ளார். தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது அம்மாநிலத்திற்குள் சி.பி.ஐ. நுழையவும், விசாரணை நடத்தவும் கடந்த நவம்பர் மாதம் தடை விதித்திருந்தார். இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் அமைந்த புதிய அரசு சி.பி.ஐக்கு எதிராக கொண்டுவரப்பட்ட விசாரணை தடை சட்டத்தை ரத்து செய்துள்ளது.

மேலும் ஆந்திர அரசின் அனுமதி இல்லாமல் மாநிலத்தின் எந்த எல்லையிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி அளிக்குமாறு மாநில உள்துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திராவில் சி.பி.ஐ. செயல்பட அனுமதி அளிப்பதால் முந்தைய ஆட்சியில் ஊழலில் திளைத்த அமைச்சர்களும், அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி அரசு உறுதியாக நம்புகிறது. 

Related Stories: