தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் 2ம் முறையாக நியமனம்: கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் தொடர்ந்து 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உளவுத்துறை தலைவராக இருந்து கடந்த 2005ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல், நாட்டின் 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் இவரது பணி சிறப்பாக இருந்தது. பாலகோட் தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை, இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட டோக்லாம் எல்லை பிரச்னைகள் போன்றவற்றை கையாண்டதில் இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த 1999ம் ஆண்டு இந்திய விமானம், காந்தகார் கடத்தி செல்லப்பட்ட போது, தீவிரவாதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். இந்நிலையில், மோடியின் 2வது அரசிலும் தோவல் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை நியமன குழு அளித்துள்ளது. இவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: