தேர்தல் ஆணையத்தில் மோதலா? மவுனம் கலைத்தார் தலைமை ஆணையர்

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கும், தேர்தல் ஆணையர் அசோக்  லவசாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், தனது எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் லவசா குற்றம்சாட்டினார். இது குறித்து சுனில் அரோரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி, அமித் ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரை நிராகரிப்பதாக எடுக்கப்பட்ட முடிவு நியாயமானது. அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து எடுக்கப்பட்டது.  தேர்தல் ஆணையர்கள் மூவரும் ஒருவரைப் போலவே  மற்றொருவரும் இருக்க முடியாது.

இந்த விஷயத்தில் நான் சர்ச்சை தொடங்கவில்லை. தேர்தல் நேரத்தில் இதை தவிர்க்க வேண்டுமென்றே கேட்டுக் கொண்டேன். அமைதியாக இருப்பது கடினமானது. ஆனால், தேர்தலை சரியாக நடத்த அதுவே சரியான வழி என்றேன். அந்த  நிலைப்பாட்டில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன். எப்போதும் தேர்தல் ஆணையர்கள் கூடி ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் போது, அந்த முடிவைதான் தெரிவிப்பார்கள். அது ஒருமனதாக எடுக்கப்பட்டதா, 2:1 என்ற பெரும்பான்மை  அடிப்படையில் எடுக்கப்பட்டதா என்பதை பற்றி வெளியிட வேண்டியதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: