கோவை வேளாண் பல்கலையில் ‘பிடெக் அக்ரி’ பாடப்பிரிவு துவக்கம்

நாமக்கல்:  கோயமுத்தூர்  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்  குமார், நேற்று நாமக்கல்லில் அளித்த பேட்டி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை பட்டப்  படிப்புக்கு விண்ணப்பிக்க  வரும் ஜூன் 6ம்  தேதி கடைசி நாள். தரவரிசை பட்டியல்  ஜூன் இறுதி வாரம் வெளியிடப்படும். தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும். இதுவரை 32 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்  பெறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில்  40 சீட்டுகளுடன் புதிதாக பிடெக் அக்ரி (வேளாண்மை பொறியியல் தொழில்நுட்ப  பட்டப்படிப்பு) தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: