தலைநகர் டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை கூட்டம் வருகின்ற 28ம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி நதி நீரை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.  காவிரி மேலாண்மை வாரியம் கடைசியாக,கடந்தாண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது.

Advertising
Advertising

அதேபோன்று ஒழுங்காற்று குழு கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற்றது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம், தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஆறு மாதங்களுக்கு பிறகு வருகின்ற 28ம் தேதி ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில டெல்லியில் நடைபெறவுள்ளது.

Related Stories: