அதிகம் சாப்பிட்டால் தூக்கம் வருவது ஏன்?

ஒரு மனிதனின் உடலில் சுமார் 5லிட்டர் ரத்தம் உள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனும், நமது உணவில் இருந்து கிடைக்கும் சத்துக்களையும் சுமந்து செல்லும் ரத்தம் உடலின் வெவ்வேறு பாகங்களுக்கும் பாய்ந்து சென்று அவ்வுறுப்புகளை செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு பாகத்திற்கும் வெவ்வேறு அளவிலேயே இதன் போக்கு இருக்கும். சாதாரண நிலையில் இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் மொத்த ரத்தத்தில் 28 சதவீதம் கல்லீரலுக்கும், 24 சதவீதம் தசைகளுக்கும், 15 சதவீதம் மூளைக்கும், மீதமுள்ள ரத்தம் மற்ற உறுப்புகளுக்கும் பாய்ந்து செல்கிறது. நாம் அதிகமான உணவு உண்டபின் அவ்வுணவை செரிக்க செய்ய, ரத்தமானது அதிகளவில் வயிற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. எனவே மூளையின் செயல்பாடு குறைந்து தூக்கம் உண்டாகிறது. அதிக உணவிற்குப்பின் சிறிது ஓய்வு எடுத்து கொள்வதற்கான எச்சரிக்கையாகவும் இதை எடுத்து கொள்ள முடியும்.

Related Stories: